வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (17:54 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு

சிறப்பு தரிசன நுழைவு சீட்டு விற்பனையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கடந்த 2010 ஆம் ஆண்டு 300 ரூபாய்க்கு சிறப்பு தரிசன நுழைவு சீட்டு விற்பனை முறை நடைமுறைபடுத்தப்பட்டது. இதன் மூலம் தினசரி 15 முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.50 லட்சமும், மாதம் ரூ.15 கோடியும், ஆண்டுக்கு ரூ.150 கோடியும் வருவாய் கிடைத்தது.
 

 
இந்நிலையில் 2014&15 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் திருப்பதிக்கு நேரில் வந்து பெறும் 300 ரூபாய்க்கான டிக்கெட் பெறும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக தினசரி 11ஆயிரம் பேருக்கு மட்டும் டிக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
இந்த திட்டத்துக்கு போதிய வரவேற்பு இல்லாததால் இதுவரை 3.53 லட்சம் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்துள்ளனர். இதனால் தேவஸ்தானத்துக்கு ரூ.21.46 கோடி வருவாய் வரவேண்டிய நிலையில், ரூ.11.35 கோடி வருவாய் மட்டுமே வந்துள்ளது. இதன் மூலம் 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.