வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:37 IST)

20 ஆண்டுகளாக காத்திருக்கும் கிராமம்: திருமண ஏக்கத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள்!

20 ஆண்டுகளாக காத்திருக்கும் கிராமம்: திருமண ஏக்கத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள்!

பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அந்த கிராமத்தில் பெண் எடுக்க யாரும் முன்வராததால் அங்குள்ள பெண்கள் திருமணமாகாமல் 20 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.


 
 
பீகாரின் பஹகல்பூரின் அருகில் உள்ள சன்ஹவுளி என்ற கிராமம் தான் அது. இந்த கிராமத்திற்கு செல்ல ஒரே ஒரு பாலம் தான் உள்ளது, அதுவும் மரண பாலமாக அபாய கட்டத்தில் உள்ளது.
 
இந்த கிராமத்தில் சுமார் 6000 மக்கள் வசிக்கின்றனர். மற்ற கிராமங்களுடன் இந்த கிராமத்தை இணைக்கை அங்கு எந்த விதமான சாலை போக்குவரத்து வசதியும் கிடையாது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கிராம மக்களால் உருவாக்கப்பட்ட தற்போது அபாய கட்டத்தில் இருக்கும் அந்த பாலத்தை கடக்க மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள்.
 
சாந்தன் ஆற்றுக்கு நடுவே இருக்கும் இந்த கிராமத்தை அடைய மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளதால், வெளி கிராமத்தினர் இங்கு வருவதையும், பெண், மாப்பிள்ளை எடுப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.
 
இதனால் அங்கு 20 ஆண்டுகளாக திருமணமே நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருமணமாகாமல் காத்திருக்கின்றனர்.