Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்திலுள்ள இந்தியா

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:00 IST)

Widgets Magazine

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பசி மற்றும் பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா, பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 97வது இடத்திலிருந்து இந்த  ஆண்டு 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் இது தொடர்பாக 119 நாடுகளிலும் ஒரு ஆய்வை நடத்தியது. அதன் அறிக்கையில், இந்தியாவில் பசி மற்றும் பட்டினியால் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் உள்ளதாகவும், 5-இல் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் எடையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 29-வது இடத்திலும், நேபாளம் 72, மியான்மர் 77, இலங்கை 84, வங்கதேசம் 88-வது  இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 107-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 108-வது இடத்திலும் இருக்கின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் மட்டுமே இந்தியாவை காட்டிலும் பின்னால் உள்ளன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி: புகழேந்தி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ...

news

பார்க்கிங், ஆன்லைன் கட்டணம் ரத்து - விஷால் அதிரடி அறிவிப்பு

அரசு நிர்ணயம் செய்த கட்டணைத்தையே தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும் என்பது உட்பல பல அதிரடி ...

news

இளம்பெண்ணை சீரழித்த 7 பேர் - கிழக்கு கடற்கரை சாலையில் அதிர்ச்சி

கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண் ஒருவரை 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ...

news

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

கேரளாவின் புனிதமான சபரிமலை கோவிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ...

Widgets Magazine Widgets Magazine