திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (13:17 IST)

ஆகாசா ஏர் விமானத்தின் முதல் சேவை: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!

akasa air
ஆகாசா ஏர்விமானத்தின் முதல் சேவை நேற்று தொடங்கிய நிலையில் இந்த சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். 
 
ஆகாசா ஏர்விமானத்தின் முதல் விமானம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அந்த விமானத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டது
 
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே தொடங்கப்பட்ட இந்த சேவையை மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். மேலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் பெங்களூர் மற்றும் கொச்சி இடையே அடுத்த சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விமானத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இந்திய சிவில் போக்குவரத்து சரித்திரத்தில் இது ஒரு புதிய துவக்கம் என்றும் பிரதமர் அவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் ஆர்வமே இந்திய சிவில் விமானப் போக்குவரத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்