1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2015 (03:11 IST)

தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனை: சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தியாவில், தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனையை நிறவேற்ற வேண்டும் என  சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இந்த கோரிக்கை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சட்ட ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதனையடுத்து, களத்தில் குதித்த சட்ட ஆணையம், மாநில அரசுகள், சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தது. அதன்பேரில், அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.
 
அதில், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனையை நிறைவேற்றலாம். மற்ற தண்டனை கைதிகளுக்கு தூக்கு தண்டனை தேவையில்லை. அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளதாம். இந்த அறிக்கை இன்னும் சில நாட்களில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 
உலகம் முழுவதும் உள்ள 98 நாடுகளில் மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.