1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 23 ஜனவரி 2015 (13:42 IST)

ஒபாமா வருகையின் போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகையின் போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதையொட்டி அவருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை போனில் பேசிய மர்ம நபர், ‘ஒபாமா வருகையின்போது தீவிரவாத தாக்குதல் நடைபெறும்’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
 
இதனால் காவல் துறையினர் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை பகல் 12.30 மணி அளவில் கண்டுபிடித்தனர். அந்த அழைப்பு தெற்கு கோவாவில் உள்ள குன்கோலிம் என்ற கிராமத்தில் இருந்து வந்ததை அறிந்து, அங்கு சென்று மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரை பிடித்தனர்.
 
அவரிடம் காவல் துறையனர் நடத்திய விசாரணையில் ‘டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளது. அதில் என்னால் பங்கேற்க முடியாது. எனவே அதனை சீர்குலைத்து விளம்பரம் தேடுவதற்காக மிரட்டல் விடுத்தேன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.