ஆண் போலீஸுக்கு மசாஜ் செய்து விடும் பொண் போலீஸ்: வைரல் வீடியோ!

ஆண் போலீஸுக்கு மசாஜ் செய்து விடும் பொண் போலீஸ்: வைரல் வீடியோ!


Caston| Last Updated: செவ்வாய், 14 நவம்பர் 2017 (12:56 IST)
தெலுங்கானா மாநிலத்தில் குப்புற படுத்திருக்கும் ஆண் போலீஸ் ஒருவருக்கு, பெண் போலீஸ் ஒருவர் காக்கி ஆடை அணிந்துகொண்டு மசாஜ் செய்து விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 
 
காவல் நிலையங்களில் நடைபெறும் அத்துமீறல்களும், காவலர்களின் அநாகரிக சில செயல்களும் அவ்வப்போது வீடியோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும். அதே போல தற்போது தெலுங்கான மாநிலத்தில் ஒரு வீடியோ வெளியாக வைரலாக பரவி வருகிறது. இதில் இரண்டு காவலர்கள் உள்ளனர்.

 

 
 
தெலுங்கானா மாநிலத்தில் உதவி ஆய்வாளாராக காவல் நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் ஹாசன் என்பவர். குப்புற படுத்துக்கொண்டு இருக்கும் அவருக்கு காக்கி சேலையில் தனது சீருடையில் இருக்கும் பெண் போலீஸ் ஒருவர் மசாஜ் செய்து விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் கவனத்துக்கு இந்த சம்பவம் சென்றது. இதனையடுத்து அவர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :