1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 26 நவம்பர் 2017 (14:30 IST)

வகுப்பறையில் பேசிய 5வயது மாணவன் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை

தெலங்கானா மாநிலத்தில் வகுப்பறையில் பேசிய 5வயது மாணவனின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
தெலங்கானா மாநிலம் நர்சிங்கி அருகே உள்ள உப்பலகுடா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஊரை சேர்ந்த 5 வயது சிறுவன் அந்த பள்ளியில் யூ.கே.ஜி வகுப்பில் படிக்கிறான். இந்த சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சக மாணவனுடன் பேசியுள்ளார்.
 
வகுப்பு ஆசிரியை சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் சிறுவன் தொடர்ந்து பேசியுள்ளான். இதில் ஆத்திரமடைந்த ஆசிரியை சிறுவனின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டியுள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற சிறுவன் இதுபற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளான்.
 
இதையடுத்து அந்த சிறுவனின் தாய் அந்த ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.