Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்க வைத்த ஆசிரியர்: இப்படி ஒரு தண்டனையா?

ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்க வைத்த ஆசிரியர்: இப்படி ஒரு தண்டனையா?

திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:14 IST)

Widgets Magazine

தெலுங்கானா மாநிலத்தில் மாணவி ஒருவர் சீருடை அணியாமல் வேறு ஆடையில் வந்ததால் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்கவைத்து தண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஐதராபாத்தை சேர்ந்த 11 வயதான மாணவியின் பள்ளி சீருடையை அவரது பெற்றோர் துவைத்து காய வைத்ததில் அது காயவில்லை. இதனால் வேறு ஆடையில் அவரை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் மாணவியின் டைரியில் அதுகுறித்த விளக்கத்தையும் எழுதி அனுப்பியுள்ளனர்.
 
இதனையடுத்து வேறு ஆடையில் மாணவி பள்ளிக்கு வந்ததை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவியிடம் விசாரித்துள்ளார். மாணவி நடந்ததை கூறி டைரியையும் காட்டியுள்ளார். ஆனால் அந்த ஆசிரியர் அதனை நம்பாமல் மாணவிக்கு தண்டனையாக அவரை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்துள்ளார்.
 
இந்த சம்பவம் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. சக மாணவர்கள் என்னை பார்த்து சிரித்து அவமானப்படுத்தினர் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அந்த மாணவி வேதைப்பட்டுள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை மாணவியின் டைரியில் எழுதி கொடுத்து விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்கவில்லை.
 
இதனால் அவர் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் மனித உரிமை ஆணையத்தையும் நாடியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராம ராவுக்கு தெரியவர அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது மனிதாபிமானமற்ற செயல், உரிய நடவடிக்கை இதற்கு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அரசு கொறடாவை நீக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மனு

அரசு கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சபாநாயகர் தனபாலிடம் ...

news

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை: தினகரன் அணிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழுவை வரும் 12-ஆம் கூட்ட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்தது. இதனை ...

news

அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் விஜய்

நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்தினரை நேரில் சென்று ...

news

அதிமுகவில் புதிய அணி?: முதல்வர் மீது அதிருப்தியில் வைத்திலிங்கம்!

சசிகலாவுக்கும், சசிகலா குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் ...

Widgets Magazine Widgets Magazine