வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (12:43 IST)

தஞ்சாவூர் உட்பட நாடு முழுவதும் 50 இடங்களில் சிறிய விமான நிலையங்கள்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 50 சிறிய விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு இடங்களைக் கண்டறிந்துள்ளது.

இதனை மத்திய விமானத் துறை இணை அமைச்சர் ஜி.எம். சித்தேஷ்வரா மக்களவையில் 2014 ஜூலை 21 அன்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே திருச்சியில் விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அதிலிருந்து 57 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சாவூரிலும் சிறிய விமான நிலையம் அமைவது, தஞ்சை மாவட்ட மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். 
 
  • தமிழ்நாட்டில்- தஞ்சாவூர்; 
  • ஆந்திர பிரதேசத்தில் - கடப்பா, திருப்பதி, விஜயவாடா, வாரங்கல்; 
  • அருணாச்சல பிரதேசத்தில் - அலாங், டெபரிசோ, பசிகாட், டெசு; 
  • அசாமில் - ஜோர்அத், ருப்சி, சில்சார்; 
  • சட்டீஸ்கரில் - பிலாஸ்பூர், ராய்கர்; 
  • பீகாரில் - கயா, ரக்சால்; 
  • டாமன் டையூ - டாமன், டையூ; 
  • குஜராத்தில் - பவநகர், ஜாம்நகர், கண்ட்லா, கேஷோத்; 
  • அரியானாவில் - ஹிசார், கர்னல்; 
  • ஜம்மு காஷ்மீரில் - கிஷ்ட்வார்; 
  • ஜார்கண்டில் - ஜம்ஷட்பூர், தியோகர்; 
  • கர்நாடகாவில் - பெல்காம், ஹூப்ளி; 
  • மத்திய பிரதேசத்தில் - குவாலியர், ஜபல்பூர், ரிவா; 
  • மகாராஷ்டிராவில் - அக்கோலா, அமராவதி, ஜல்குவான், கோல்ஹாபூர், சோலாப்பூர்; 
  • ஒடிசாவில் - ஜர்சகுடா; 
  • பஞ்சாபில் - லூதியானா; 
  • ராஜஸ்தானில் - கோட்டா, கிஷன்கர், பிகேனர்; 
  • உத்திர பிரதேசத்தில் - ஆக்ரா, அலகாபாத், பரேலி, பாசியாபாத், கான்பூர், மீரட், மொரதாபாத் மற்றும் சகாரன்பூர் 
ஆகிய இடங்களில் சிறிய விமான நிலையங்கள் அமைக்க இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.