வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (23:11 IST)

'கன்னிப்பேச்சில்' கணியன் பூங்குன்றனார் வரிகள்: அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழகத்திலிருந்து முதல் முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு சென்றவர்களில் ஒருவர் திமுகவை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன். அடிப்படையில் கவிஞரான இவர் தனது முதல் கன்னிப் பேச்சை பாராளுமன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் வரிகளுடன் தொடங்கினார்
 
நாடாளுமன்ற மக்களவையில் இன்று தனது கன்னிப் பேச்சை பதிவு செய்த தமிழச்சி தங்கபாண்டியன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை கூறினார். அதுமட்டுமின்றி 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்ற திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி தனது முதல் உரையை தொடங்கினார் 
 
தமிழச்சி தங்கபாண்டியன் தனது முதல் உரையில் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இவ்வாறு தங்கத்திற்கு வரி உயர்த்தப்பட்டதால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் தனி பொறுப்பில் இருக்கும் பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தன்னுடைய வாழ்த்து தெரிவித்துக் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன், அவருடைய முதல் பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய தள்ளுபடி செய்யுமாறு எதுவுமில்லை என்பது அதிருப்தியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்