1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2015 (12:13 IST)

உறுப்பு தானம்: தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தமது மன்கிபாத் வானொலி பேச்சில் தெரிவித்துள்ளார்.


 
 
மன்கிபாத் (மனதில் உள்ளதை பேசுகிறேன்) நிகழ்ச்சி மூலம் வானொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி மாதம் ஒரு முறை நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
 
அந்த வகையில் இன்று பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "இதயம் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது".
 
"அந்த வகையில், மற்ற மாநிலங்களை விட உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.அதேபோல், மாசு இல்லா தீபாவளியை கொண்டாட வேண்டும். ஊழலை தடுக்க, மத்திய அரசின் கீழ்நிலை வேலைவாய்ப்புகளுக்கான நேர்காணல் முறையை வரும் ஜனவரி முதல் ரத்து செய்யப்படும்" இவ்வாறு மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.