1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (17:58 IST)

நுழைவுக் கட்டண வசூலில் தாஜ்மஹால் முதலிடம்

நுழைவுக் கட்டணங்கள் வசூலிப்பதில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜ்மகால் முதலிடத்தில் இருக்கிறது.
 

 
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிட நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் தாஜ்மகாலில்தான் அதிகமான அளவில் வசூலாகிறது.
 
2014ஆம் ஆண்டில் 21 கோடியே 78 லட்சம் ரூபாய் வசூலானது. 2012-13 ஆம் ஆண்டில் 24 கோடியே 58 லட்சமும், 2013-14 ஆம் ஆண்டில் 22 கோடியே 40 லட்சம் ரூபாயும் வசூலாகியிருக்கிறது. முந்தைய நிதியாண்டை விட, கடந்த நிதியாண்டில் வசூல் குறைந்துள்ளது. இருப்பினும், வசூலில் முதலிடத்தில் தாஜ்மகால் தொடர்கிறது.
 
கடந்த நிதியாண்டில் செங்கோட்டை 5 கோடியே 90 லட்சம் ரூபாயையும், ஜந்தர் மந்தர் 23 லட்ச ரூபாயையும், பெங்களூருவில் உள்ள திப்பு சுல்தான் கோட்டை 22 லட்ச ரூபாயையும் வசூலித்துள்ளன. நாடு முழுவதும் உள்ள வரலாற்றுக்கால கோவில்களிலும் வசூல் அதிகரித்திருக்கிறது.
 
ஆனால் கஜூராஹோ, அஜந்தா மற்றும் எல்லோரா ஆகிய இடங்களில் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது வசூல் சரிந்துள்ளது. மத்தியத் தொல்பொருள் ஆய்வுக்கழகத்தின் வசம் உள்ள 116 வரலாற்றுச் சின்னங்கள் மூலம் மத்திய அரசுக்கு 93 கோடியே 38 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது.