1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (15:48 IST)

ரணகளத்திலும் கிளுகிளுப்பு ; கலாய்த்த எம்.பி - வாய் விட்டு சிரித்த மோடி (வீடியோ)

பாராளுமன்றத்தில், மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு விவாதத்தில் சமாஜ் வாடி எம்.பி. நரேஷ் யாதவ் பேசிய பேச்சில் பிரதமர் மோடி வாய் விட்டு சிரித்த வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பிற்கு,  காங்கிரஸ் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மோடி கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர். இதனால் கடந்த 5 நாட்களாக அவை முடக்கப்பட்டது. 
 
எனவே, இன்று மோடி ரூபாய் நோட்டு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டார். இதில் பேசிய காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், மோடியில் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்தர். இது அரசின் மிகப்பெரிய நிர்வாக தோல்வி என குறிப்பிட்டார்.
 
அதன்பின் பேசிய சமாஜ் வாடி கட்சி எம்.பி. நரேஷ் யாதவ் “ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பாக பிரதம் மோடி நிதி மந்திரி அருண் ஜெட்லியைக் கூட நம்பவில்லை. ஒருவேளை அருண் ஜெட்லிக்கு தெரிந்திருந்தால், அவர் எங்களிடம் ரகசியத்தை கூறியிருப்பார். ஏனெனில் அவருக்கு என்னை நன்றாக தெரியும்” என்றார்.
 
இதனைக் கேட்டு, பிரதமர் மோடி, அருண் ஜெட்லி மற்றும் அவையில்  இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். 
 
அதன்பின் பேசிய அவர் “பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையெனில், எங்களை யார் காப்பாற்றுவார்?...பாதுகாப்பு குறித்து மோடி அச்சம் கொள்ள தேவையில்லை. குறைந்தபட்சம் அவருக்கு உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு உள்ளது. ஏனெனில் அங்கு சமஜ்வாடி கட்சி ஆட்சி செய்கிறது” என்று கூறினார்.
 
இதைக்கேட்டும் மோடி மற்றும் அவையில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். 
 
சில நாட்களுக்கு முன்பு பேசிய மோடி, எனது ரூபாய் நோட்டு அறிவிப்பால் கருப்புப் பணம் பதுக்கும் பலர் என்மீது கொலை வெறியில் திரிகிறார்கள். அவர்கள் என்னை கொல்லவும் அஞ்ச மாட்டார்கள்” என்று கூறினார். 
 
அதை வைத்துதான் நரேஷ் யாதவ் அப்படி பேசினார் என்று தெரிகிறது.