நான் நலமுடன் இருக்கிறேன் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் மேனன்


Murugan| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:34 IST)
நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ் மேனனை பற்றி வெளியான செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

 

 
ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன், உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தி வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது. 
 
மலையாளத்தில் பிரித்திவிராஜ் கதாநாயகனாக நடித்த புதிய முகம் என்ற படத்தை இயக்கிய திபன் என்பதவர்தான் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார். எனவே, தமிழில் புதிய முகம் படத்தை இயக்கிய ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் அவர் என தவறான புரிதலோடு இந்த செய்தி வெளியாகியுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் நலமாக இருக்கிறேன். திபன் என்னுடைய நண்பர். அவரின் மறைவு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :