செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (19:14 IST)

கார், வீடு, வைர நகைகள் - வைர வியாபாரியின் அதிரடி தீபாவளி போனஸ்

தீபாவளி போனஸாக கார்கள், வீடுகள் மற்றும் தங்க நகைகளை வழங்குகிறார் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர்.
 
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தங்களது ஊழியர்களுக்கு இந்தப் பரிசுகளை அறிவித்துள்ளார்.
 
இந்த ஆண்டுக்கான இலக்குகளை எட்டிய ஊழியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களின் கடின உழைப்புக்கு பரிசாக அவர்களுக்கு, வீடுகள், கார்கள் மற்றும் தங்க நகைகளைப் பரிசாக வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
 
அந்த வியாபாரி கூறுகையில், "நாங்கள் எங்களுக்குள்ளாகவே இந்த திட்டத்தை சென்ற ஆண்டே முடிவு செய்திருந்தோம். அதன்படி தங்களது இலக்கை அடைந்த 1200 ஊழியர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்" என்றார்.
 
மேலும் இதற்காக அவர்கள் 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும், இதனால், ஊழியர்களை ஆண்டுதோறும் தங்களது இலக்கை அடைய இது ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
 
இதன்படி, இவர்களில் 200 ஊழியர்களுக்கு வீடுகளும், 525 பேருக்கு தங்க நகைகளும், 491 பேருக்கு கார்களும் வழங்கப்படுகிறது.