வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (11:40 IST)

என்னை விமர்சித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்: சன்னிலியோன் பதிலடி

ஆணுறை விளம்பரத்தில் நடித்ததற்காக தன்னை விமர்சித்து மக்கள் பிரதிநிதிகள் தங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பாலிவுட் நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னி லியோன் பிரபல ஆணுறை நிறுவனத்தின் விளம்பரத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விளம்பரம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

சன்னி லியோன் நடித்துள்ள இந்த ஆணுறை விளம்பரத்தால் நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும்  என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அடுல் குமார் அன்ஜான் தெரிவித்திருந்தார்.அடுல் குமார் அன்ஜானுக்கு சன்னி லியோன் பதிலடி அளித்துள்ளார்.

இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், "என்னை விமர்சித்து மக்கள் பிரதிநிதிகள் தங்களின் நேரத்தையும், சக்தியையும் செலவிடுவது கவலை அளிக்கிறது. இந்ந நேரத்தை அவர்கள் உதவி தேவைப்படுபவர்களுக்காக செலவிட வேண்டும்" என்று கூறினார்.