வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (12:22 IST)

உலகின் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் சன்னி லியோன்!

உலகின் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் சன்னி லியோன்!

கனடாவை சேர்ந்தவரும் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன் பிபிசி பட்டியலிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் நான்கு இந்திய பெண்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


 
 
இந்தியாவை சேர்ந்த 57 வயதான மல்லிகா ஸ்ரீநிவாசன் டஃபே என்ற டிராக்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக இருந்தவர். இவர் தனது நிறுவனத்தை உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் நிறுவனம் என்ற நிலைக்கு கொண்டு வந்தவர். இவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
 
மேலும் இந்த பட்டியலில் இந்திய பெண்களான பிரபல நடிகையும் , எழுத்தாளருமான நேஹா சிங், சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரடா திமக்கா கௌரி என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியடிங் மாணவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
உலக அளவில் புகழ் பெற்ற பிரபல பாடகியும் பாடலாசிரியருமான அலிசியா கீஸ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ், பிரான்ஸ் அரசியல் பிரமுகர் ரச்சிதா டாட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் முன்னாள் நீலப்பட நடிகையும், பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன் இடம்பெற்றுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.