வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (14:25 IST)

டிச. 31ம் தேதிக்குள் தமிழகத்தில் மீண்டும் சுனாமி? - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

வருகிற டிச. 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் நில நடுக்கும் ஏற்பட்டு, சுனாமி தாக்கும் என ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.


 

 
2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது தமிழக கடலோர பகுதிகள் பெரும் சேதமடைந்தன. பல ஆயிரம் உயிர்கள் கடல் நீருக்கு பலியாகின. இந்நிலையில், கேரளாவில் உள்ள பி.கே.ரிசர்ச் அசோசியோஷன் பார் இஎஸ்பி என்ற ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. 
 
வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு கடல் எல்லைகள் மாறும். மேலும், பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். 
 
அப்போது கடலில் 120-180 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கனமழை பெய்யும். எனவே, முன்னெச்சரிக்கையாக மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
எனவே, இந்திய கடற்கரைகள் எனில் அதில் சென்னை கடற்கரையும் பாதிக்குமா என்கிற பீதி பலருக்கும் ஏற்பட்டது.
 
இந்நிலையில், இதோ போன்ற கணிப்புகளை நம்பக் கூடாது என தன்னார்வ வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியுள்ளார். தற்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல மாதங்களுக்கு முன்பே பேரிடர்களை கணிக்க முடியாது. நிலநடுக்கம், சுனாமி, புயல் போன்ற நிகழ்வுகளை, அவை ஏற்படும் நாளுக்கு சில நாட்கள் அல்லது சில மணி நேரத்திற்கு முன்புதான் கணிக்க முடியும். எனவே, இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.