வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (11:49 IST)

ராகுல்காந்தி இந்துவா கிறிஸ்தவரா என்பதை நிரூபிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!

ராகுல்காந்தி இந்துவா கிறிஸ்தவரா என்பதை நிரூபிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தேவாலயங்களுக்கு செல்வதால் அவர் ஒரு இந்துவா அல்லது கிறிஸ்தவரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 
 
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய வகையில் அடிக்கடி பேசுவார். இதனால் இவரது கருத்துக்களுக்கு அடிக்கடி எதிர்ப்புகள் எழும். இருந்தாலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறாமல் இருக்கமாட்டார். தொடர்ந்து அதே போலத்தான் செயல்படுவார்.
 
சர்ச்சை கருத்துக்களுக்கு புகழ்பெற்ற சுப்பிரமணியன் சுவாமி தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளரும் கூட. இவர் தற்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
 
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தான் இந்துவா, அல்லது கிறிஸ்தவரா என்பதை தெளிவுபடுத்த தான் ஒரு இந்து தான், கிறிஸ்தவர் அல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
ராகுல் காந்தி இந்துக்களின் ஆதரவை பெற குஜராத்தில் இந்து கோவில்களுக்கு சென்று வருகிறார். ஆனால் டெல்லியில் உள்ள தேவாலயத்திற்கு பலமுறை சென்று பிரார்த்தனை செய்துள்ளார் எனவும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.