1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 7 டிசம்பர் 2016 (18:09 IST)

சசிகலா அதுக்கு சரிவரமாட்டார்; அதிமுக உடைவது உறுதி - சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்!!

அதிமுக கட்சி இரண்டாகவது உடைவது உறுதி என்று பாரதிய ஜனதா ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானர். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. 
 
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி அதிமுக உடையும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 
ஜெயலலிதா மரணத்தினால், அதிமுக நிச்சயமாக உடைவது உறுதி. எனெனில் சசிகலா கட்சி பொறுப்பை ஏற்க நினைத்தால் ஆட்சியையும் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பார். இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தால் சுதந்திரமாக செயல்பட முடியாது. 
 
ஆனால், பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தம்முடைய குடும்பத்தில் இருந்து ஒருவரை சசிகலாவுக்கு எதிராக முன்னிறுத்துவார். ஆனால், அவருக்கு கட்சியில் செல்வாக்கு இல்லை. 
 
அதேசமயம், சசிகலாவுக்கோ அரசியல் அறிவு இல்லை. எனவே என்ன நடந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சியையும், அளுமையையும் இருவராலும் ஈடுசெய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.