வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (03:28 IST)

தீன் தயால் உபத்யாயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த சுப்பிரமணியன் சாமி கோரிக்கை

ஜன் சங்கத்தை தோற்றுவித்த தீன் தயால் உபத்யாயா மரணம் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:- 
 
ஜன் சங்கத்தை தோற்றுவித்தவர் தீன் தயால் உபத்யாயா. அவர் , கடந்த 1968ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி உத்திரபிரதே மாநிலத்தில்,  முகல்சாரா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் உபத்யாயா இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
தீன் தயால் உபத்யாயா மரணம் பல சந்தேகங்களை கொண்டுள்ளது. எனவே, அவரது மரணத்தை, சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும்.
 
இந்த வழக்கில் சி.பி.ஐ. பல உண்மைகளை மூடி மறைக்கிறது. ரயிலில் இருந்து கொள்ளையர்கள் தள்ளிவிட்டதால் உபத்யாயா மரணமடைந்தார் என்பதை அவருடன் நெருக்கமாக இருந்த நானாஜி தேஷ்முக் மற்றும் தட்பான்ட் தேங்கடி ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.