ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 ஜூன் 2016 (00:03 IST)

கல்லூரி மாணவியை பினாயில் குடிக்க வைத்து ராகிங்

கர்நாடக மாநிலத்தில் நர்சிங் கல்லூரி மாணவியை பினாயிலை குடிக்க வைத்து சீனியர் மாணவிகள் ராகிங் செய்துள்ளனர்.


 

 
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அஸ்வதி, கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள அல் குமர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ளார். ராகிங்கில் ஈடுபட்ட கல்லூரியின் சீனியர் மாணவிகள், அஸ்வதியை கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்துள்ளனர். 
 
இந்த சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்கு பின்னர் கடுமையான வயிற்றுவலியால் அஸ்வதி, சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளார். கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்ததால், அவரின் உணவுக்குழாய் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ராகிங் ஈடுப்பட்ட சீனியர் மாணவிகளும் கேரளாவை சேர்ந்தவர் என்பதும், இந்த ராகிங் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதும் தெரியவந்துள்ளது.