Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர்; மாணவனை அடித்து உதைத்த போலீஸ்


Abimukatheesh| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (16:05 IST)
தெலங்கானாவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்து கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பிய மாணவனை போலீஸார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
தெலங்கானா மாநிலம் மெகபூநகரில் இயங்கி வரும் பள்ளியில் 10ஆம் வகுப்பு கணித ஆசிரியர் வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனைக் கண்ட மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காவல்துறையினர் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து அந்த மாணவனை கடுமையாக அடித்துள்ளனர். பள்ளி வளாகத்துக்குள் மது அருந்தியதாக கூறி அடித்துள்ளனர். இந்த சம்பவம் ஆசிரியர்களின் கண் முன்னே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
 
வகுப்பறையில் ஆசிரியர் தூங்கியதை புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிக்கு அனுப்பியதல் சக ஆசிரியர்கள் அந்த மாணவனை தாக்க காவல்துறையினரை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :