காலையில் பள்ளிக்கூடம், இரவில் பார்: ஆசாமிகளின் பலே பிஸ்னஸ்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:31 IST)
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

 
 
பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. மிர்சாபூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் ஆபாச அழகிகளின் நடன நிகழ்ச்சியை அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு சென்றதும், பள்ளியை பாராக மற்றியுள்ளனர். இரவு நேரத்தில் உள்ளூர் ஆசாமிகள் சிலர் பள்ளியில் பார் அழகிகளை வரவைத்து குடியும் கூத்துமாய் இருந்துள்ளனர். அழைத்து வந்து குத்தாட்டம் போட வைக்கின்றனர். 
 
இது தொடர்பான வீடியோவை பள்ளிக்கூடத்தை பாராக மாற்றிய ஆசாமிகள் வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :