வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (13:55 IST)

குடியரசு தினம் 2015 - அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டி

இந்திய அஞ்சல் துறை, வரவிருக்கும் குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தினம் 2015 என்ற தலைப்பில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடத்த உள்ளது. 
 
இப்போட்டிக்கான விதிமுறைகள்:
 
1. அஞ்சல் தலைக்கான வடிவமைப்பு, உங்களுடைய சொந்த வடிவமைப்பாக இருக்க வேண்டும். மற்றவர்களின் வடிவமைப்பின் நகலாக உங்கள் வடிவமைப்பு இருக்கக் கூடாது.
 
2. உங்கள் வடிவமைப்பு, மையிலோ வாட்டர் கலர், ஆயில் கலர் அல்லது மற்ற வடிவமைப்பு முறைகளிலோ இருக்கலாம்.
 
3. பங்கேற்பாளர்கள் A4 அளவில் உள்ள டிராயிங் பேப்பர், ஆர்ட் பேப்பர் அல்லது எந்தவித வெள்ளை நிறத் தாளையும் பயன்படுத்தலாம்.
 
4. கணினி முறையில் அச்சிடப்பட்ட (Computer print / print out is not allowed) வடிவமைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
 
5. அஞ்சல் அட்டை சேகரிப்பவரின் விருப்பத்திற்கேற்ப, அஞ்சல் அட்டையில் அச்சிடப்படும் வகையிலம் இந்த வடிவமைப்பு இருக்க வேண்டும்.
 
6. அனுப்பி வைக்கப்படும் வடிவமைப்பின் பின்புறம், பங்கேற்பவரின் பெயர், வயது, நாடு, பின்கோடு கொண்ட முழு முகவரி, தொலைபேசி / கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
 
7. நான் சமர்ப்பித்திருக்கும் இந்த வடிவமைப்பு, எனக்கு சொந்தமானது, இதில் எந்தவிதமான காப்புரிமைப் பிரச்சினைகளும் எழாது என்று பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று உறுதி அளிக்க வேண்டும். ஏதேனும் காப்புரிமைப் பிரச்சினைகள் எழுந்தால் அஞ்சல் துறை அதற்குப் பொறுப்பேற்காது.
 
8. வடிவமைப்பு எந்த மடிப்பும் இன்றி A4 அஞ்சல் உறையில் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். உங்கள் வடிவமைப்புகளைக் கொண்ட, அஞ்சல் உறையில் "குடியரசு தினம் 2015 - அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டி" என்று எழுதி அனுப்ப வேண்டும்.
 
9. வெற்றி பெறும் வடிவமைப்புகள், அஞ்சல் தலையிலும் மற்ற அஞ்சல் தலை சார்ந்த பதிப்புகளிலும் உபயோகிக்கப்படலாம். 
 
வெற்றி பெறும் வடிவமைப்புக்கு முதல் பரிசாக - ரூ.10,000/-
இரண்டாவது பரிசாக - ரூ. 6,000/-
மூன்றாவது பரிசாக - ரூ. 4,000/- வழங்கப்படும்.
 
10. வடிவமைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014. கடைசி நாளுக்குப் பிறகு வந்து சேரும் வடிவமைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 
 
உங்கள் வடிவமைப்புகளை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி, 
 
உதவி இயக்குநர் (Philately), 
அறை எண்.108 (B), 
டாக் பவன், 
நாடாளுமன்றத் தெரு, 
புது தில்லி-110001. 
 
மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in அல்லது www.postagestamps.gov.in என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.