Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா உடல் நலக்குறைவு - ஸ்டாலின் கரிசனம்; வைகோ கவலை

Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (00:13 IST)

Widgets Magazine

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

 
அங்குள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.
 
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள தகவலில், ”உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
இதுபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த கவலை ஏற்பட்டது. முதலமைச்சர் முழுமையான உடல்நலம் பெற இயற்கை அன்னையின் அருளை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அய்யய்யோ!.. 95 சதவீத வீடுகள் பூகம்பத்தை தாங்காது

‘நாட்டில் உள்ள, 95 சதவீத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு பூகம்பத்தை தாங்கும் திறன் இல்லை’ ...

news

400க்கும் மேற்பட்ட இந்திய முதலைகள் வரி ஏய்பு - பஹாமாஸ் தீவுகளில் முதலீடு என தகவல்கள்

பஹாமாஸ் தீவுகளில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முதலீடு செய்துள்ளதாக அவர்களின் பெயர்கள் ...

news

பெண் கிடைக்காமல் தவிக்கும் 9 லட்சம் வாலிபர்கள்

குஜராத் மாநிலத்தில் தற்போது வரை 9 லட்சம் வாலிபர்கள், பெண் கிடைக்காமல் திருமணத்திற்கு ...

news

ரஜினியை சந்தித்த தோனி

சென்னையில் நடிகர் ரஜினியை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துள்ளார்

Widgets Magazine Widgets Magazine