வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (18:15 IST)

தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை உறுதி அளிக்க வேண்டும்: நரேந்திர மோடி வலியுறுத்தல்

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, சுய நிர்ணயம் கிடைக்க உறுதியளிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இரா. சம்பந்தன் தலைமையில் மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு வந்தனர்.

இக்குழுவில் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை. சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட இலங்கை தமிழ் எம். பி.க்கள் குழு புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.

அப்போது இலங்கை தமிழர் விவகாரம், இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தமிழ் சமூதாயத்திற்கு நீதி, சமத்துவம், கண்ணியம் சுய மரியாதை கிடைக்க வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் உரிமை மற்றும் பரஸ்பர தங்கும் வசதி, கிடைப்பதற்கு அரசியல் தீர்வு காண்பதை நோக்கி ஆகபூர்வமாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கும் என்று தமிழ்க் கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் உறுதி அளித்தார். வீடுகள் கட்டுவது, தலைமுறைகளின் வாழவாதாரம், திறன் வளர்த்தல், கல்வி, மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தும்.“ இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிப்பப்பட்டுள்ளது.