Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சாக்லெட்டில் மயக்க மருந்து கொடுத்து மனைவியை நண்பருக்கு இரையாக்கிய கணவன்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 16 மார்ச் 2017 (13:25 IST)
மனைவிக்கு சாக்லெட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது நண்பரை உல்லாசம் அனுபவிக்க செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சலீம் மொகைதீனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சலீம் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார். 
 
அங்கிருந்து தனது மனைவியுடன் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். அவ்வப்போது ஆபாசமான முறையில் பேசி மனைவியை நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாரும் கூறி வந்துள்ளார். 
 
அதை வீடியோவாக பதிவு செய்து, தனது நண்பர்களுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஹைதராபாத் வந்துள்ளார் சலீம். 
 
சில தினங்களுக்கு முன்பு சலீம் தனது நண்பரான முகமது ஷானை வீட்டிற்கு அழைத்து வந்து, மனைவிக்கு மயக்க மருந்து கலந்த சாக்லெட்டை கொடுத்து, பின்னர் முகமது ஷானை தனது மனைவியுடன் உல்லாசமாக இருக்கும்படி கூறியுள்ளார். இதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். 
 
பின்னர் இந்த காட்டி தான் கூறும் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க மனைவியை வற்புருத்தி உள்ளார். இதனால் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
 
அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி சலீம் மொகைதீனை கைது செய்தார். தலைமறைவாக உள்ள முகமது ஷானை தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :