வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (09:46 IST)

சோனியா காந்தி வீடு பாஜகவினரால் முற்றுகை

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக்கு கேட்க வலியுறுத்தி பாஜகவினர் சேனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டனர்.


 

 
கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் நடைப்பெற்ற என்கவுன்டர் போலியானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அண்மையில் கருத்து தெரிவிந்திருந்தார்.
 
இதைதொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பயங்கரவாதிகள் நாங்கள் துப்பாக்கி சூடு நடைப்பெற்ற போது நாங்கள் அங்கு தான் இருந்தோம், பின்னர் தகவல் கிடைத்து அங்கிருந்து தப்பிவிட்டோம் என்று கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் அந்த என்கவுன்டர் சம்பவம் போலி இல்லை என்று உறுதிப்படுத்து விதமாக இருப்பதால், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜகவினர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டன்ர்.
 
ஆர்ப்பாட்டத்தில், பாஜக எம்.பி.க்கள் ரமேஷ் பிதுரி, உதித் ராஜ், மீனாட்சி லேகி, விஜய் கோயல், சதீஸ் உபாத்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
மேலும் காங்கிரஸின் உண்மையான் முகத்தை வெளிப்படுத்தவே தற்போது நாங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்று டெல்லி பாஜக தலைவர் சதீஸ் உபாத்யா கூறினார்.