Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை சுட்டுக் கொன்ற தந்தை

Last Modified: சனி, 29 ஜூலை 2017 (15:45 IST)

Widgets Magazine

உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மது கடைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பலரும் போராட்டம் செய்து வருகின்றனர். மதுவால் ஆங்காங்கே குற்றங்களும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள ரிகுண்டி என்ற கிராமத்தில் திரேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தை மன்மோகன் லோதி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். மகன் தொடர்ந்து அவரது தந்தைக்கு குடிப்பழக்கத்தை விட எடுத்துக் கூறி வந்துள்ளார். ஆனால் அவரது தந்தை குடிப்பழக்கத்தை விடவில்லை.
 
சம்பவத்தன்று மகனுக்கும் தந்தைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை அவருடைய துப்பாக்கியால் சொந்த மகனையே சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மோடியின் அரசின் பேடி அரசுதான் எடப்பாடி அரசு: பழ.கருப்பையா விளாசல்!

திமுகவின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பிரபல தமிழ் வார இதழின் ...

news

ஸ்டாலினுக்கு அதை பற்றி பேசவே தகுதியில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்!

நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை என ...

news

துப்பாக்கி முனையில் என் தலை சிதறினாலும்; வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!

‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு ...

news

மொல்லமாரிகளுடன் தமிழக அமைச்சர்களை ஒப்பிட்டு பேசிய திமுக பிரபலம்!

தமிழக அமைச்சர்களை மொல்லமாரிகளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு ...

Widgets Magazine Widgets Magazine