வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2015 (11:05 IST)

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சமூக சேவகி மேதா பட்கர் ராஜினாமா

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக பிரபல சமூக சேவகி மேதா பட்கர் அறிவித்தார்.
 
நேற்று சனிக்கிழமை [28-03-15] டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூசண், யோகேந்திர யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
 

 
இந்நிலையில் பிரபல சமூக சேவகி மேதா பட்கர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆம் ஆத்மியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நடந்தது துரதிர்ஷ்டமான ஒன்றாகும்.  பிரசாந்த் பூசண், யோகேந்திர யாதவ் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது.
 
கட்சியின் தேசிய செயற்குழுவில் நிரந்தர அழைப்பாளராக இருப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியின் கொள்கைகள் மிதித்து நசுக்கப்பட்டு இருக்கிறது. பிரசாந்த் பூசண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலையை கண்டிக்கிறேன். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கேலிக்குரிய கட்சியாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.