வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (14:33 IST)

காணாமல் போன ஸ்னாப்டீல் பணிப்பெண் வீடுதிருப்பினார்: 4 பேர் கடத்திச் சென்றதாக தகவல்

டெல்லியில் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் காணாமல் போன ஸ்னாப்டீல் பணியாளர் திப்தி சர்னா பத்திரமாக விடுதிருப்பியுள்ளார்.


 

 
சில தினங்களுங்களுக்கு முன்னர் காசியாபாத்தில் மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த திப்தி சர்னா காணாமல் போனார்.
 
இந்நிலையில், தொலைபேசியில் பேசிய திப்தி சர்னா, தான் பத்திரமாக உள்ளதாக கூறினார் என்று காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
ஸ்னாப்டீல் நிறுவனம் பணியாளரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தது. மேலும், #HelpFindDipti என்ற ஹஷ்டாக்குடன் செய்தி வெளியிட்டது.
 
அதில், காசியாபாத்தில் காணாமல் போன பணியாளர் திப்தி சர்னாவை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
அவர் குர்கானிலுள்ள அலுவலகத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் காசியாபாத் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல 8 மணியளவில் ஆட்டோ பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
 
அவ்வாறு செல்லும் வழியில், திப்தி சர்னா, பெங்களூரில் உள்ள தனது தோழியும் செல்போனில் பேசியுள்ளார். அதன் பின்னர் அவருடைய தொலைபேசியும் சுவிட் ஆப் செய்யப்பட்டது.
 
இதற்கிடையில், அவர் காணாமல் போய்யுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்தது.
 
இது குறித்து பெங்களூருவில் உள்ள திப்தியின் தோழி காவல்துறையினருடன் பேசினர். அப்போது அவர் கூறுகையில், "திப்தி போனில் பேசியபோது, எப்போதும் இல்லாத வகையில் புதிய வழியில் ஆட்டோவை இயக்கிய ஆட்டோ ஓட்டுநரை அவர் திட்டியது கேட்டதாக"  கூறினார்.
 
இந்நிலையில், அவர் பாதுகாப்பாக வீடு திருப்யியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை 4 பேர் கடத்திச் சென்றதாகவும் அவர் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.