Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மனைவியை மீட்டுக் கொடுங்கள் ; இளம் வயது மனைவியை தேடும் 62 வயது நபர்

செவ்வாய், 13 ஜூன் 2017 (16:43 IST)

Widgets Magazine

தன்னுடைய 23 வயது மனைவியை காணவில்லை என, 62 வயது முதியவர் போலீசாரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் வசிப்பவர் சதீஷ் ஆப்தே. அவருக்கு வயது 62. இவர்  கடந்த 2015ம் ஆண்டு 23 வயதுடைய லிசா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அப்போது, அவர் மனைவியுடன் எடுத்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
 
இந்நிலையில், சதீஷ் சமீபத்தில் போலீசாரிடம் ஒரு புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் தன்னுடைய மனைவி வீட்டை விட்டு வெளியேறி, குஜராத்தில் உள்ள வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டார். இதற்கு என்னுடைய மைத்துணி மோனிகா என்பவர்தான் காரணம் என அவர் கூறியிருக்கிறார்.
 
இதையடுத்து, மோனிகாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, லிசாவிற்கு சதீஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, லிசா குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 
 
ஆனால், இதை மறுத்துள்ள சதீஷ், அவர்கள் கூறுவது பொய். லிசா என்னை விரும்பியே திருமணம் செய்து கொண்டார். ஆனால், என் மைத்துனி மோனிகாதான் இது அத்தனைக்கும் காரணம். ஏனெனில், அவள் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள். எனவே, திட்டமிட்டு தனது சகோதரியை என்னிடமிருந்து பிரித்து, வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டாள். ஆனால், இப்போதும் லிசாதான் என் மனைவி. நாங்கள் விவாகரத்து பெறவில்லை. எனவே, அவரை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார் அந்த 62 வயது ஆசாமி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி அதிரடி!!

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா A என்னும் ஆங்கில உள்ளீடு எழுத்து இடம் பெரும் புதிய 500 ரூபாய் ...

news

ரஜினிக்கு பயந்து குழுவை கலைத்த ஓபிஎஸ்: ஒப்புக்கொண்ட மாஃபா பாண்டியராஜன்!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் பல்வேறு ...

news

கைவிட்ட பாஜக ; கலக்கத்தில் தினகரன் : நடப்பது என்ன?

ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவை பெற நம்மிடம்தான் பாஜக வரவேண்டும் என நம்பியிருந்த ...

news

அடுத்த குடியரசு தலைவராக ஒரு தமிழர் வர வாய்ப்பு!

தற்போது குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் ...

Widgets Magazine Widgets Magazine