வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (17:02 IST)

சென்னை வழியாக இயக்கப்படும் 11 வடமாநில ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை மற்றும் சென்னை வழியாக இயக்கப்படும் 11 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
 

 
இட்டார்சி சிக்னல் கட்டுப்பாட்டகத்தில் கடந்த 17 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தால் ரயில்கள் ரத்தாகி உள்ளன.  நாளை 4 ரயில்களும், திங்கட்கிழமை 7 ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
 
  • பாட்னா - பெங்களூர் சங்கமித்ரா ரயில் (12296) (12295) இரு மார்கங்களிலும் நாளை ரத்து
  • டெல்லி - புதுச்சேரி (22404), கயா - எழும்பூர் (12386) வாராந்திர ரயில்களும் நாளை ரத்து
 
29 ஆம் தேதி 7 ரயில்கள் ரத்து
 
  •  கங்கா - காவேரி (12670) ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (16318/16788) ரத்து
  • சென்னை சென்ட்ரல் - டெல்லி ஜி.டி.எக்ஸ்பிரஸ் (12615/12616) 2 மார்க்கத்திலும் ரத்து
  • லக்னோ - சென்னை சென்ட்ரல் (16094) சாப்ரா ரயில் ரத்து