பணியாளர் மூலம் காலணியை சரிசெய்த முதல்வர்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (18:44 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி: News7Tamil
பிரபல நடிகர் சேதன் ராம ராவ் மரணமடைந்ததையடுத்து மைசூரில் உள்ள அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா சென்றார். அங்கு, அவரது காலணியை ஒருவர் சரிசெய்வது போல் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.  
 
இந்த வீடியோ காட்சி கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சித்தராமைய்யாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
இதையடுத்து காலணியை சரிசெய்தவர் பணியாளர் இல்லை என்றும், அவர் சித்தராமைய்யாவின் உறவினர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :