முதல்வர் மீது காலணி வீச்சு: அதிர்ச்சியில் பஞ்சாப்


Abimukatheesh| Last Updated: புதன், 11 ஜனவரி 2017 (16:25 IST)
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் பர்காஷ் சிங் பாதல் மீது ஒரு நபர் காலணி வீசியதில் அவரது மூக்கு கண்ணாடி உடைந்தது.

 

 
பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். மாநில முதல்வர் பர்காஷ் சிக் பாதல் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று முக்த்சர் மாவட்டம் லாம்பியில் பிரசாரம் மேற்கொண்டார். 
 
அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென காலணியை முதல்வர் மீது வீசினார். இதில் அவரது மூக்கு கண்னாடி உடைந்தது. 
 
கடந்த ஞாயிறு அன்று பர்காஷ் சிங் பாதல் மகன் பிரசாரம் மேற்கொண்டபோது வாகனங்கள் கல் வீசப்பட்டது. தொடர்ந்து மக்கள் அவர் மீது எதிர்ப்பு தெரிவிப்பு வருவதன் மூலம் இந்த முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பு கடினமாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :