வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (18:45 IST)

முஸ்லீம்களுக்கு சலுகைகள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்கு செல்லட்டும்: சிவசேனா கருத்தால் சர்ச்சை

முஸ்லீம்கள் குறித்து பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
முஸ்லீம்களுக்கு சிறப்பு சலுகைகள் வேண்டுமென்றால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என்று சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில் வெளியான தலையகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் அவர்கள் முதலில் இந்தியாவை தங்கள் தாய்நாடாக ஏற்றுக்கொண்டு வந்தே மாதரம் என முழக்கமிட வேண்டும் என்று தலையகம் கூறியுள்ளது. 
 
தங்களது மதத்தை இறுகப் பற்றிக்கொண்டு அவர்களால் சுதந்திரம் கேட்க முடியாது என அந்த தலையகத்தில் காட்டமாக தெரிவிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
 
கடந்த ஞாயிற்று கிழமை நாக்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய மஜ்லேஷ் கட்சி தலைவர் அஷாவுதீன் மகாராஷ்ராவில் மாராட்டிய இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது போல முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே சாம்னாவில் இது போன்று ஒரு தலையகங்கம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.