வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (11:56 IST)

அமீர்கானை கன்னத்தில் அறைபவர்களுக்கு 1 லட்சம் பரிசு : சிவசேனா அதிரடி அறிவிப்பு

சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தண்டன், அமீர்கானை அறைபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் கருத்து தெரிவித்த போது “என் மனைவி என்னிடம், நாம் இத்தனை நாள் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். நாட்டில் குறைந்து வரும் சகிப்புத்தன்மையை பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஒவ்வோரு நாளும் செய்தித்தாட்களை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே வேறு நாட்டிற்கு சென்று விடலாமா என்று என்னிடம் கேட்டார். அவர் தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொள்கிறார்.  நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
 
அமீர்கானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் மீது போலிசில் பூகார் மற்றும் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு ஆகியவை தொடுக்கப்பட்டது. 
 
அவரின் வீட்டு முன்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அமீர்கானின் கருத்துக்கு, பாஜாக மற்றும் சிவசேனா அமைப்பினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், ஒரு படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர்கான், லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலில் தங்கியுள்ளார். அந்த ஹோட்டலில் வெளியே அவருக்கு எதிராக சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவரது புகைப்படங்களை எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன் தலைமை தாங்கினார்.
 
ராஜின் தண்டன் பேசும் போது “அமீர்கான் தங்கியிருக்கும் இந்த ஹோட்டலில் உழியர்களுக்கும், அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு தருகிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்கள் அமீர்கானின் கன்னத்தில் அறையும் ஒவ்வொரு அறைக்கும் ஒரு லட்சம் பரிசு தரப்படும்” என்று கூறினார். அவர் அப்படி கூறியிருப்பது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.