வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (03:34 IST)

குடும்ப கட்டுபாட்டை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - சிவவேசனா

நாட்டுக்கு லோக்பால் சட்டத்தைவிட, பொது சிவில் சட்டமே மிகவும் முக்கியமானது என்று சிவசேனா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து உத்தவ் தாக்ரோ தலைமையில் வெளியாகும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியுள்ளதாவது:-
 
இந்து மக்கள் தொகைக்கு இணையாக முஸ்லீம் மக்கள் தொகையை  பெருக்குவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்து விடாது. நாடு நலன் பெற அனைவருக்கும் ஒரே சட்டம் தேவை. அது மட்டும் அல்ல, அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில், கட்டாய குடும்ப கட்டுபாட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசிடம் சங் பரிவார் அமைப்பு உறுதியோடு வலியுறுத்த வேண்டும்.
 
கடந்த 2001 முதல் 2011 வரையில் முஸ்லிம் மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளது. 2015 வரையில் இது நிச்சயம் 5 முதல் 10 சதவீதத்துக்கு மேலும் உயர்ந்திருக்க வாய்பு உள்ளது.
 
இந்தியாவில், முஸ்லீம் மக்கள் தொகை தொகை உயர்வு காரணமாக நாட்டில், மொழி, புவியியல், ஏற்றத்தாழ்வு உருவாகும்.  இதனால் நாட்டின் ஒற்றுமையில் நிச்சயம் பிளவு ஏற்படும்.
 
நள்ளிரவில் வந்து கதவை தட்டினால் கூட உங்கள் பிரச்சினையை தீர்க்க தயாராக உள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதே போல், மூஸ்லீம்களும் நாட்டு வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அதை அவர்கள் செய்யவார்களா என்பதை தெழுவுபடுத்த வேண்டும்.
 
எனவே, குடும்ப கட்டுபாட்டை ஏற்றுக் கொள்வதின் அவசியத்தை முஸ்லீம்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும். மேலும், நாட்டுக்கு லோக்பாலைவிட, பொதுசிவில் சட்டமே மிகவும் முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது.