1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K,N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (05:54 IST)

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சசி தரூரிடம் உண்மை கண்டறியும் சோதனை

அமைச்சர் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சசி தரூரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் சுனந்தா இறந்து கிடந்தார்.
 
சசிதரூரின் வீட்டு பணியாளர் நாராயண் சிங், கார் டிரைவர் பஜ்ரங்கி மற்றும் அவரது குடும்ப நண்பர் சஞ்சய் திவான் ஆகியோரை சந்தேகத்துக்கு உரிய நபர்கள் என டெல்லி காவல்துறை அறிவித்தது. சிதரூரிடம் காவல்துறையினர் ஏற்கனவே 3 தடவை விசாரணை நடத்தியுள்ளனர்.
 
இந்நிலையில், இவர்கள் மூவரும் சில உண்மைகளை மறைப்பதால், அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதி மன்றத்தில் டெல்லி காவல்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கியது. இது குறித்து விசாரிக்க டெல்லி போலீஸ் சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
 
இதனையடுத்து, சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து டெல்லி காவல் துறை ஆணையர் கூறுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் சிலரிடம் சோதனை நடத்தப்படும் என்றார்.
 
இந்நிலையில், சுனந்தா கொலை வழக்கில், அவரது கணவர் சசி தரூர், உண்மைகளை மறைப்பதாகக் காவல்துறையில் சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவரிடம், பாலிகிராப் என்ற உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து விரிவான ஆலோசனைகளைக் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.