வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 25 ஜூலை 2015 (23:48 IST)

பீகார்: ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் நிதிஷ்குமார்

பீகாரில், ஒரே மேடையில் பிரதமர் மோடியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்ட விழா பலரையும் ஆச்சர்யப்படவைத்தது.


 

இந்திய அரசியலில் இரு துருவங்களாக இருப்பவர்கள் பிரதமர் நரேந்திர மோடியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
 
இந்நிலையில், பீகார் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடி இன்று முதல் பீகாரில் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார். பாட்னாவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், பீகார் முதலமைச்சர்  நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
 
அப்போது, புதிய ரெயில்வே திட்டம், ஐஐடி போன்ற பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
 
பிஜேபி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், பீகார் மாநில வளர்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்படும் என்று நாடளுமன்ற தேர்தலுக்கு முன்பு உங்களுக்கு ஒரு உறுதி மொழி அளித்தேன். தற்போது, அதற்குமேல், கூடுதலாகவே நிதி உதவி அளிக்கப்படும். பீகார் மாநிலத்துக்கான பலத் திட்டங்கள் அரசியல் காரணங்களுக்காக தள்ளிப் போடப்பட்டன. அவற்றை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.
 
பீகாரில் மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. அதனையும் மீறி, பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் கலந்து கொண்டார்.