சரத்பவாரை தேடி வரும் குடியரசு தலைவர் பதவி?

சரத்பவாரை தேடி வரும் குடியரசு தலைவர் பதவி?


K.N.Vadivel|
இந்திய குடியரசு தலைவர் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத் பவார், மகாராஷ்டிராவை மாநிலத்தை சேர்ந்தவர்.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சரத் பவார் கடந்த 1999 ஆம் ஆம்டு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். தற்போதும், அதன் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.
 
சரத் பவாருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக போன்ற பல்வேறு கட்சிகளில் நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றம் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் சரத் பவாருக்கு நல்ல நெருக்கம் உள்ளதால், பவாருக்கு உயர்ந்த பதவி கிடைக்கும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றது.
 
முன்பு, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த என்சிபி தற்போது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அங்கு பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி  ஆகியோர் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
 
இதனையடுத்து, குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயர் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக சரத் பவார் பதவி வகித்துவருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
 
 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :