செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (18:54 IST)

மாட்டுக்கறி உண்பது சைத்தான் உடலில் புகுவது போன்றது - பிரதமர் மோடி

மாட்டுக்கறி உண்பது சைத்தான் உடலில் புகுவது போன்றது என்று பீகாரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 

 
பீஹார் தேர்தல் வரும் 12ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 5ஆம் வரை ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 8ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
 
மொத்தம், 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீஹாரில், நிதிஷ்குமார் தலைமையிலான அணியும், பாஜக தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
 
இந்நிலையில், பீகாரில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாட்னாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, மாட்டுக்கறி உண்பது சைத்தான் உடலில் புகுவது போன்றது என்று கூறியுள்ளார்.
 
மேலும், அவர் கூறுகையில், ”நீங்கள் அனைவரும் மாட்டுக்கறி உண்கிறீர்களா என்ன? இது யாதவ மக்களை இழிவுபடுத்தும் செயல். லாலுஜி நீங்கள் ஆட்சிக்கு வர இந்த யாதவர்கள் உதவினார்கள். எல்லா யாதவர்களும் மாட்டுக்கறி உண்கிறார்களா என்ன? இல்லையே.. இது யதவ மக்களையும், பீஹார் மக்களையும் இழிவுபடுத்தும் செயல்.
 
சைத்தான் எப்படி லாலுவின் முகவரியை பெற்றார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எப்போது மாட்டுக்கறி உண்கிறோமோ அப்போது நமது உடலில் சைத்தான் புகுந்துவிடுகிறான்” என்றூ கூறியுள்ளார்.