வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (16:23 IST)

பீர் பாட்டில், பணம் லஞ்சமாக பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி கைது

புனேவில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ரூ. 2,500 மற்றும் பீர் பாட்டிலை லஞ்சமாக பெற்றதால் கைது செய்யப்பட்டார்.
 
பொது இடத்தில் போதையில் மக்களை தொந்தரவு செய்த புகாரில் கைதான நபரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. 2,500 மற்றும் பீர் பாட்டிலை லஞ்சமாக பெற்ற எரவாடா காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மோரேவை  லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
 
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட பின் குற்றம் சாற்றப்பட்ட நபர், தன் மீது பிரகாஷ் பொய் புகார் பதிவு செய்ததாகவும், மேலும் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க அவருக்கு ரூ.2,500 மற்றும் ஒரு பாட்டில் பீர் வாங்கி கொடுக்க வேண்டுமெனவும் கூறியதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். 
 
இதன் பேரில், பிரகாஷின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அவர் லஞ்சம் பெற்றதும் அவரை கைது செய்தனர்.