1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (16:09 IST)

பரப்பன அக்ரஹாரா சிறையைச் சுற்றி, 1 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, சிறையிலிருந்து வெளியே வரும் அவரை வரவேற்க, பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்ப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பரப்பன அக்ரஹாரா சிறையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இதனைப் பெங்களூரு காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி அறிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சிறையைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போதுமான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. யாரும் எந்தவிதமான வதந்திக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று காவல்துறை கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 
அவரது ட்வீட்டுகள் வருமாறு: