செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (14:05 IST)

பாக். முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: இந்தியா கோரிக்கை!

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த ஒரு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் இவ்வளவு ஆவேசமாக செயல்படுவது ஏன்? என்பதே உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. 
 
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது பாகிஸ்தான். ஏற்கனவே தூதகரை திரும்ப அழைப்போம், தூதரகத்தை மூடுவோம் என்று சொன்ன பாகிஸ்தான், தற்போது வாகா எல்லையை மூடவும் முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
காஷ்மீர் குறித்து இந்தியா பிறப்பித்த சட்டங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறிய பாகிஸ்தான், காஷ்மீர் எல்லையை மூடியுள்ளது. 
 
முதலில் பாகிஸ்தானின் இந்த மிரட்டலை இந்தியா கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஆனால், இப்போது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.