பள்ளி செல்ல உயிரை பணயம் வைக்கும் மாணவர்கள் (வீடியோ)

Gujarat
Last Updated: புதன், 11 ஜூலை 2018 (13:41 IST)
குஜராத் மாநிலத்தில் பள்ளி செல்ல மாணவர்கள் உயிரை பணயம் வைத்து செல்லும் காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள நைகா - பேராய் கிராமங்களுக்கு இடையே தடுப்பணையுடன் கூடிய சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் இல்லையென்றால் மக்கள் 10 கி.மீ தொலைவு சுற்றி செல்ல வேண்டும். 
 
இந்த பாலம் இரண்டு மாதங்களுக்கு முன் பழுதடைந்துள்ளது. இதுவரை இந்த பாலத்தை சீரமைக்க கிராம நிர்வாகமோ அரசோ முனவரவில்லை. இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தடுப்பணையில் உள்ள ஷட்டரின் கதவை பிடித்து தாவி செல்கின்றனர்.
 
இந்த நிகழ்வு வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பொதுமக்கள், அதிகாரிகள் இந்த பாலம் விவகாரத்தில் கூடுதல் அக்கறை எடுத்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 
 
மழை பெய்து வருவதால் பாலடம் சீரமைப்பு பணியை உடனடியாக தொடங்க முடியவில்லை என்றும் விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :