வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:20 IST)

வாஜ்பாய் இறந்துவிட்டதாக அஞ்சலி செலுத்தி பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர்

ஒடிசாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், வாஜ்பாய் இறந்து விட்டதாக அறிவித்து, இரங்கல் கூட்டம் நடத்தி, பின் பள்ளிக்கு விடுமுறையும் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசாவில் ஒரு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கமலகண்ட தாஸ். இவர், ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு ஒரு ஆசிரியர் இவரிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக  தவறான தகவலை கூறினார்.
 
இதனை நம்பிய தாஸ், நேராகப் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை அழைத்து வாஜ்பாய்க்கு இரங்கல் கூட்டம் நடத்தி, அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல், பள்ளிக்கும் விடுமுறையும் அறிவித்து விட்டார்.
 
இதனை அறிந்த உள்ளூர்காரர்கள், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சனதன் மாலிக்கிடம் புகார் அளித்தனர். இது பற்றி கருத்துக் கூறிய கலெக்டர் “அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளேன். தேவைப்பட்டால் அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்” என அறிவித்துள்ளார்.