செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (15:30 IST)

ஹதியா திருமணம் செல்லுமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஷாகின் ஜெகான் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து  இஸ்லாம் மதத்தில் இணைந்து தனது பெயரையும் ஹதியா என்று மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் செல்லாது என்று ஹதியாவின் தந்தை கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கேரள ஐகோர்ட் ஹதியாவின் திருமணத்தை ரத்துசெய்தது. இதனையடுத்து ஹதியா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

ஹதியாவின் மேல்முறையீட்டு வழக்கில் சற்றுமுன்னர் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், இந்த திருமணம் செல்லாது என்று கேரள ஐகோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்வு செய்ய ஹதியாவுக்கு முழு உரிமையும் உண்டு என்றும் ஹதியா திருமணம் செல்லாது என அறிவிக்க கேரள ஐகோர்ட்டுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

இதனையடுத்து ஹதியா, ஷாகின் ஜெகான் இடையேயான திருமணம் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால் ஹதியா தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.